பொதுமக்களே உஷார்.. பிரிட்ஜ் வெடித்து பயங்கர தீ விபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!



Fridge fire accident 4 death in Karnataka

கர்நாடகாவில் பிரிட்ஜ் திடீரென வெடித்து பயங்கர தீ விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவி நகரின் மையப்பகுதியில் உள்ள சவத் காலி பகுதியில், வீட்டில் இருந்த பிரிட்ஜ் திடீரென வெடித்துச் சிதறியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென வீடு முழுவதும் பரவியதால், வீட்டுக்குள் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

இந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: கணவர் மரணத்தில் திடீர் திருப்பம்... மனைவி, மாமியார் கைது.. பின்னணியில் கள்ளத்தொடர்பு?

karnataka

போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், வீட்டில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக மின் அழுத்தம் அதிகரித்து, பிரிட்ஜ் வெடித்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரிட்ஜ் வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ வேகமாகப் பரவி, வீட்டில் இருந்தவர்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்துக்கான சரியான காரணம், மின் கசிவு ஏற்பட்ட விதம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நாற்காலியை நகர்த்தியதில் தகராறு… மாணவியை சரமாரியாக தாக்கிய சக மாணவன்.. அதிர்ச்சி வீடியோ!