உன்னுடைய போதைக்கு பொண்டாட்டி, புள்ள ஊறுகாய்யா.... 3 வயது பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்...! சிவகாசியில் நடந்த அதிர்ச்சி....!!!



sivakasi-three-year-old-girl-murder-arrest

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 3 வயது விஷ்ணுபிரியா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயுடன் வசித்து வந்த நபர் தாக்கியதில் சிறுமி உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப சூழலில் ஏற்பட்ட மாற்றம்

சாத்தூர் அருகே வைகோ நகரைச் சேர்ந்த சுவாதி (22), துரைப்பாண்டியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு விஷ்ணுபிரியா என்ற 3 வயது மகள் இருந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக சுவாதி தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பெண்ணை கட்டிப்போட்டு தவெக நிர்வாகி அதிர்ச்சி செயல்.. கைது செய்த போலீஸ், தலைமை எடுத்த நடவடிக்கை.! 

புதிய வாழ்க்கை, பின்னர் நேர்ந்த சோகம்

வெம்பக்கோட்டையில் உள்ள பட்டாசு ஆலையில் வேலைக்குச் சென்ற சுவாதிக்கு, அங்கு பணியாற்றிய சிவகாசி பேராபட்டியைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு, திருத்தங்கல் பசும்பொன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு மதுபோதையில் இருந்த விக்னேஷ்வரன், சுவாதியையும் சிறுமியையும் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த விஷ்ணுபிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கொலை வழக்குப் பதிவு

தகவல் கிடைத்ததும் திருத்தங்கல் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விக்னேஷ்வரன் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ள போலீசார், சம்பவத்தின் பின்னணி குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: விருதுநகர் : கிரிக்கெட் விளையாடிய அமைச்சர்கள் கீர்த்தனா, ஜெகதீஸ்வரி.! புதிய செயற்கை புல்வெளி மைதானம் திறப்பு.!