பெண்ணை கட்டிப்போட்டு தவெக நிர்வாகி அதிர்ச்சி செயல்.. கைது செய்த போலீஸ், தலைமை எடுத்த நடவடிக்கை.! 



TVK Functionary Arrested for Robbery After Woman Tied Up; Party Removes Him from Post

தமிழக வெற்றிக் கழக நிர்வாகி உட்பட 3 பேர் திருட்டு வழக்கில் கைதாகி இருக்கின்றனர். 

நகைகள் மாயம்: 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவரை கட்டிப்போட்டு, அவரின் வீட்டில் இருந்த 21 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். 

இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் கர்ப்பம்.. தவெக நிர்வாகி கைது.. நாமக்கல்லில் ஷாக்.!

தவெக நிர்வாகி: 

விசாரணையில், பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டார். அதாவது, தவெக நிர்வாகி சரவணகுமார், விருதுநகர் மாவட்ட இளைஞரணி அளவில் பொறுப்பில் இருந்துள்ளார். 

Crime news

கைது: 

இவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதைத்தொடர்ந்து, அவரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இவருடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசியல்கட்சி நிர்வாகி கைது நடவடிக்கைக்குப்பின், அக்கட்சியின் தலைமை சரவணகுமாரை பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டது. 

இதையும் படிங்க: நண்பருடன் பேசிய பெண்ணை தனியே அழைத்துச்சென்று பாலியல் அத்துமீறல்.. காவலர் கைது.. கோவையில் ஷாக்.!