வீடியோ: வீட்டிற்குள் வராதே என்றதும் அப்படியே திரும்பிச்சென்ற பாம்பு!! வைரல் வீடியோ..

வீடியோ: வீட்டிற்குள் வராதே என்றதும் அப்படியே திரும்பிச்சென்ற பாம்பு!! வைரல் வீடியோ..


Snake return viral video

வீட்டிற்குள் வர முயன்ற பாம்பை வீட்டின் உயிரிமையாளர் பேசியே விரட்டிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள கதிர்நாயக்கன் பாளையம் லட்சுமி நகரில் கனகராஜ் என்பவர் வசித்துவருகிறார். கடந்த வியாழக்கிழமை இவரது வீட்டிற்குள் 5 அடி நீளம்கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று உள்ள வந்துள்ளது. பாம்பு வீட்டிற்குள் வருவதை பார்த்த கனகராஜ், வீட்டிற்குள் வராதே.. காட்டுக்குள் போ என கூற, உடனே பாம்பும் அங்கிருந்து திரும்பி சென்றுள்ளது.

கனகராஜ் வீட்டில் இருந்து திரும்பிய பாம்பு, அருகில் இருந்து குழிக்குள் விழுந்தநிலையில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள் பாம்பை அங்கிருந்து மீட்டுச்சென்றனர். பாம்பிற்கு காது கேட்க்காது என்றாலும், கனகராஜ் கூறியதும் பாம்பு சட்டென திரும்பி சென்ற இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.