#சீர்காழி அருகே.. கடற்கரையில் பொதுமக்கள் கண்ட காட்சியால் அதிர்ச்சி.! 

#சீர்காழி அருகே.. கடற்கரையில் பொதுமக்கள் கண்ட காட்சியால் அதிர்ச்சி.! 



Sirkazhi beach has mystery object

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழிக்கு அருகே மீனவ கிராமமான கீழமூவர்க்கரை கிராமம் அமைந்துள்ளது. கடற்கரையை ஓட்டியுள்ள இந்த கீழமூவர்க்கரை கிராமத்தில், கடலோரமாக 15 அடி உயரம் கொண்ட ஒரு சிவப்பு நிற மர்ம பொருள் கரை ஒதுங்கியுள்ளது. இது அப்பகுதி மக்களின் பார்வையில் பட்டதால் அவர்கள் என்னவோ ஏதோ என்று நினைத்துக் கொண்டு மிகவும் பயத்துடன் பூம்புகார் கடலோர காவல் குழும காவல்துறையினருக்கு தகவல் அனுப்பியுள்ளனர். 

Sirkazhi

இந்த தகவலை கேட்ட அவர்கள் உடனடியாக குறிப்பிட்ட பகுதிக்கு விரைந்து வந்து ஜேசிபி எந்திரத்தின் மூலம் அந்த பொருளை கரைக்கு எடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, இதுபற்றி அவர்கள் விசாரணை மேற்கொண்ட நிலையில் இது போயம் என்று அழைக்கப்படும் கருவி என தெரியவந்துள்ளது. இந்த போயம் கருவி கடலில் தடை செய்யப்பட்ட பகுதிகளை உணர்த்தும் வேலையை செய்யும் என்பதும் அவர்களது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக மயிலை மாவட்ட சீர்காழிக்கு அருகே உள்ள மீனவ கிராமமான நாயக்கர்குப்பத்தில் இதுபோல ஒரு மர்ம உருளை கரை ஒதுங்கியது. 

Sirkazhi

அந்த உருளையில் ஆங்கில எழுத்துக்களில், 'அபாயம் தொட வேண்டாம்' என எழுதப்பட்டு இருந்தது. மக்களிடையே இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது ஆபத்து சமயங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை வெளியேற்றி எச்சரிக்கை செய்வதற்காக பயன்படுத்தப்படும் வாயு உருளை என்பது விசாரணைக்கு பின்னர் தெரிய வந்தது. இப்படி திடீர் திடீரென மீனவர் கிராமங்களில் மிதக்கும் மின்கழிவுகள் பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.