தனது அப்பாவின் தோல்விக்கு பிறகு, ஒரே வரியில் நடிகை ஸ்ருதிஹாசன் போட்ட பதிவு! பாராட்டும் ரசிகர்கள்!!shruthi-haasan-tweet-after-fther-lose-in-election

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் திமுக 159 தொகுதிகளில் முன்னிலையில் வந்து 10 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியை பிடித்தது. மேலும் அதிமுக 75 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார்.  நேற்று வாக்கு எண்ணிக்கையில்  நடிகர் கமலஹாசன் ஆரம்பத்தில் இருந்து முன்னிலையில் இருந்து வந்தார். மேலும் அவர்தான் வெற்றி பெற்றுவிடுவார் என பலரும் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் வெற்றியடைந்தார்.

shruthi haasan

கமலின் தோல்வி ரசிகர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான சுருதிஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில், கமல்ஹாசன் கையில் டார்ச் லைட் வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அதில் எனது தந்தையை எண்ணி எப்போதும பெருமைப்படுகிறேன் என பதிவிட்டுள்ளார். மேலும் அவரது பதிவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.