இனிமேல் ஒரு நிமிஷம் கூட பார்த்துகிட்டு இருக்க முடியாது.! சசிகலா எடுத்த அதிரடி முடிவு.!

இனிமேல் ஒரு நிமிஷம் கூட பார்த்துகிட்டு இருக்க முடியாது.! சசிகலா எடுத்த அதிரடி முடிவு.!


sasikala announcement

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலை ஆனதும் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, தான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அவர் திடீரென அறிவித்தார். இதனால் சசிகலாவின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. இந்நிலையில், அதிமுக நிர்வாகிகளிடம் சசிகலா பேசும் ஆடியோக்கள் சமீப காலமாக வெளியாகி அதிமுகவில் புதிய சலசலப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில் சசிகலா நிர்வகித்து வரும் டாக்டர் நமது எம்ஜிஆர் நாளேட்டில் சசிகளா வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி வீணாவதை ஒருநிமிடம் கூட கட்சியை வளர்த்த நம்மால் பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். எல்லோரும் அதிமுக பிள்ளகைள் தான். புரட்சித்தலைவர் எப்போதுமே கட்சி வித்தியாசமே பார்க்கமாட்டார். இவர்களா? அவர்களா? என்றெல்லாம் பார்க்கமாட்டார்.

அதனையெல்லாம் பார்த்துதான் வளர்ந்து வந்திருக்கிறோம். என்னை பொறுத்தவரை எல்லோரும் ஒன்றுதான், எல்லோரும் நம் பிள்ளைகள் தான். அதிமுக என்பது தொண்டர்களின் இயக்கம். அதனை எப்பொழுதும் தொண்டர்கள் நிரூபித்துக் காட்டுவார்கள். கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், தொண்டர்களிடம் ஒரு தாய்போல் அனுசரணையாக இருந்து காப்பாற்ற வேண்டும், ஆனால் இப்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை. விரைவில் வருகிறேன், எல்லோரையும் சந்திக்கிறேன், கவலைப்படாதீர்கள். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என சசிகலா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.