தமிழகம்

தமிழகத்தில் கொட்டி தீர்க்கவிருக்கும் கனமழை.! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.?

Summary:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சமீபத்தி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சமீபத்தில் உருவாகி கரையை கடந்த டவ்தே புயல் காரணமாக, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனையடுத்து உருவான யாஸ் புயல் காரணமாக கன்னியாகுமரி உள்பட தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இடந்தநிலையில், வெப்பச்சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதேபோல், நாளை வெள்ளிக்கிழமையும், நாளை மறுநாள் சனிக்கிழமையும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால் அருவிப்பகுதிக்கு பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 


Advertisement