கோடை வெயிலில் வதைபடும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! தமிழகத்தில் கொட்டி தீர்க்கவிருக்கும் மழை.!

கோடை வெயிலில் வதைபடும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! தமிழகத்தில் கொட்டி தீர்க்கவிருக்கும் மழை.!



rain in tamilnadu

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயில் வாட்டி எடுத்து வருவதால் புழுக்கத்தில் மக்கள் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறுகையில், கேரளா மற்றும் அதை ஒட்டியபகுதிகளில் நிலவும் வளிமண்டலமேலடுக்கு சுழற்சியால் 4, 5-ம்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

rainமேலும் 6, 7-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியமாவட்டங்கள், உள் மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி ,தென்காசி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைபெய்யக் கூடும் என தெரிவித்துள்ளார்