தண்ணீரில் தத்தளிக்கும் புதுக்கோட்டை.! அந்த அளவுக்கு மழை இல்லையே.. என்ன காரணம்.?



Rain in pudukkottai

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. இதன் காரணமாக ஏரி-குளங்கள் நிரம்பின. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன. கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த மழை மீண்டும் தொடங்கியுள்ளது.

அந்தவகையில் புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. நள்ளிரவில் கொட்டித்தீர்த்த இந்த மழையினால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் குடியிருப்புப் பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

நேற்று மூன்று மணி நேரமாக விடாமல் பெய்த கனமழையால் புதுக்கோட்டையில் மேட்டுப்பட்டி, ஸ்ரீ நகர், திருக்கட்டளை, அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், அப்பகுதியில் உள்ள பல குளங்கள் நிரம்பி குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். உடனடியாக நகராட்சி நிர்வாகம் மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.