தமிழகம்

காற்றில் நடனமாடும் மரங்கள்..! பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை..! எங்கு தெரியுமா..?

Summary:

Rain in Dharmapuri video goes viral

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெய்யில் வாட்டி வதைத்த நிலையில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது.

உம்பன் புயல் காரணமாக தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வந்த நிலையில், இன்று பிற்பகல் வாக்கில் அரூர் தென்கரைகோட்டை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. வேகமாக வீசிய காற்றில் மரங்கள் அங்கும் இங்கும் அசையும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.

தருமபுரியை அடுத்து கோவையிலும் சில இடங்களில் மழை பெய்துவருகிறது.


Advertisement