தமிழகம்

சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை.! சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.!

Summary:

சென்னையில் அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இந்தநிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  வடபழனி, கோயம்பேடு, சைதாப்பேட்டை ,அண்ணா நகர்,எழும்பூர், சென்ட்ரல், அண்ணாசாலை, வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை விடிய விடிய பெய்து வருகிறது. 

சென்னையில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பின் சென்னையில் ஒரே நாளில் அதிகளவு மழை பெய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 2 முதல் 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.


Advertisement