போலீஸ் சீருடையிலேயே குடித்து விட்டு ரோட்டில் கலாட்டா செய்த பெண் போலீஸ்! அதிர்ச்சியான பொதுமக்கள்.



Police

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மதுரை பஸ்கள் நிற்கும் இடத்தில் நேற்று போலீஸ் சீருடை அணிந்த பெண் ஒருவர் மயங்கி கிடந்துள்ளார். இதனை அங்கிருந்த பயணிகள் மற்றும் கடைக்காரர்கள் பார்த்து விட்டு உடல் நிலை சரி இல்லாமல் இருக்கலாம் என நினைத்து அவரை எழுப்பியுள்ளனர்.

ஆனால் அவரால் எழுந்து உட்கார கூட முடியவில்லை. அப்போதுதான் அவர் நல்ல போதையில் இருந்தது தெரியவந்ததுள்ளது. உடனே அவரை ஆட்டோவில் ஏற்ற முயற்சித்துள்ளனர். 

ஆனால் அந்த போலீஸ் போதையில் இருந்ததால் அங்கு இருந்த பயணிகளை மோசமான வார்த்தையில் பேசியுள்ளார். இதனையடுத்து அவரது செல்போன் மூலம் அவரது வீட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

police

அந்த சமயத்தில் திண்டுக்கல் பஸ்நிலையத்தில் ஆய்வு பணிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் வந்துள்ளார். புறக்காவல் நிலையத்தில் போலீசார் யாரும் இல்லாததைக் கண்டு விசாரித்துள்ளார்.

பணியில் இருக்க வேண்டிய பெண் போலீஸ் உடல்நிலை சரி இல்லாமல் சென்று விட்டதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் குடிபோதையில் கிடந்த பெண்ணின் மகன் அங்கு வந்து அவரை ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அந்த பெண் போலீஸ் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஏற்கனவே தனது நண்பர்களுடன் மது அருந்திய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதையடுத்து இவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருந்தார்.

மீண்டும் பணியில் சேர்ந்த நிலையில் தற்போது போலீஸ் சீருடையிலேயே குடிபோதையில் மயங்கி கிடந்த சம்பவம் பயணிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்தது.