முகம் சிதைந்த சடலம்... அதிர்ச்சியில் பொது மக்கள்.!! நடந்தது கொலையா.? காவல்துறை விசாரணை.!!
திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் பகுதியில் முகம் சிதைந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவிரி ஆற்றுப்படுகையில் சடலம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள முள்ளிப்பட்டி என்ற கிராமத்தில் காவிரி ஆற்றுப்படுகையில் முகம் சிதைந்த நிலையில் ஆண் சடலம் கிடந்திருக்கிறது. இதனைக் கண்ட பொதுமக்கள் கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
55 வயது நபர்
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையை நடத்திய விசாரணையில் இறந்த நபருக்கு 55 வயது இருக்கலாம் என தெரிய வந்திருக்கிறது. மேலும் அவரது முகம் சிதைந்த நிலையில் காணப்படுவதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்திருக்கிறது. இறந்த நபர் கொலை செய்யப்பட்டாரா.? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா.? என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: "ஐயோ கொல்ல பாக்குறாங்க.." பைக்கை மறித்து மனைவிக்கு வெட்டு.!! கணவன் வெறி செயல்.!!
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் அதிர்ச்சி... நிதி நிறுவன ஊழியர் கடத்தி கொலை.!! பின்னணி என்ன.?