ஜாமின்ல ஏன் எடுக்கல? சிறைக்கு சென்றுவந்த உடனே மனைவி கொலை.. சிவகங்கையில் பகீர் சம்பவம்.!
சிறைக்கு சென்று திரும்பிய மறுநாளே, ஜாமினில் எடுக்கவில்லை என்று கூறி மனைவியை கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்பதி:
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழைத், சொட்டத்தட்டி கிராமத்தில் வசித்து வருபவர் யோகராஜன் என்ற கருவாயன் (வயது 29). இவரின் மனைவி பாண்டிச்செல்வி. தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து 6 மற்றும் 3 வயதுடைய இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: மனைவியின் தலையை துண்டித்து நடுவாசலில் வைத்த கணவன்.. நள்ளிரவில் நடந்த திடுக் சம்பவம்.!
பொறுப்பில்லாதவன்:
திருமணம் முடிந்தாலும் பொறுப்பற்ற முறையில் தறிகெட்டு வாழ்க்கையை நகர்த்தி வந்த யோகராஜன், குற்றச்செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரின் மீது பல காவல் நிலையங்களில் திருட்டு வழக்கும் உள்ளன. மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலையத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆத்திரம்:
தொடர் குற்றத்தால் யோகராஜன் மீது குண்டர் சட்டமும் பாய்ச்சப்பட்டு கடந்த ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்டார். கணவர் சிறைக்குச் சென்றபின் பாண்டிச்செல்வி அவரை ஜாமினில் எடுக்க முயற்சிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த யோகராஜன், பெற்றோரின் முயற்சியில் வெளியே வந்துள்ளார்.
கொலை:
இந்நிலையில், சிறைவாசத்துக்குப்பின் 2 நாட்களுக்கு முன்பு வெளியே வந்தவர், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின் மாலை நேரத்தில் நடந்த சண்டையின்போது, ஆத்திரமடைந்த யோகராஜன் மனைவியை அரிவாள் கொண்டு சரமாரியாக வெட்டி இருக்கிறார். இந்த சம்பவத்தில் பாண்டிச்செல்வி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
விசாரணை:
பாண்டிச்செல்வியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நேரில் வந்த அதிகாரிகள் & மருத்துவ குழுவினர் பாண்டிசெல்வி உயிரிழந்ததை உறுதி செய்த நிலையில், உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையை அரங்கேற்றிய யோகேஸ்வரன் திருபுவனம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதையும் படிங்க: கடப்பாரையால் தாக்கி மனைவி கொடூர கொலை.. நடத்தை சந்தேகத்தால் பயங்கரம்.!