திண்டுக்கல்லில் அதிர்ச்சி... நிதி நிறுவன ஊழியர் கடத்தி கொலை.!! பின்னணி என்ன.?



finance-company-employee-brutally-murdered-shocking-inc

திண்டுக்கல்லை சேர்ந்த நிதி நிறுவன ஊழியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்

திண்டுக்கல்லில் உள்ள தோமையார்புரம் மேடு பகுதியில் கை, கால்கள் மற்றும் கண்கள் கட்டப்பட்டு கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து பட்டாகத்தியையும் கைப்பற்றினர். 

tamilnadu

தனியார் நிதி நிறுவன ஊழியர் கொலை

சம்பவம் நடந்த இடத்திற்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் திண்டுக்கல் சின்னாளம்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். நிதி நிறுவனத்தில் வீட்டுக் கடன் வசதி பிரிவில் வேலை செய்து வந்த பாலமுருகன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பதவியை ராஜினாமா செய்ததும் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இதையும் படிங்க: அட பாவமே... மனைவி, குழந்தைகள் மீது கொலை முயற்சி.!! மது பிரியர் வெறி செயல்.!!

காணாமல் போனதாக புகார்

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாலமுருகனை காணவில்லை என அவரது சின்னாளபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதன் மூலம் அவர் கடத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. கொடூரமாக கொலை செய்யப்பட்ட பாலமுருகன் முன்பகை காரணமாக கொல்லப்பட்டாரா.? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா.? என்பது குற்றவாளிகளை கைது செய்த பின்னரே தெரியவரும் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த அத்தை மகளுக்கு கத்தி குத்து.!! முறை மாமன் தலைமறைவு.!!