"ஐயோ கொல்ல பாக்குறாங்க.." பைக்கை மறித்து மனைவிக்கு வெட்டு.!! கணவன் வெறி செயல்.!!
திருப்பூரில் தாய் வீட்டிற்கு சென்ற பெண், கணவரால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சரணடைந்த கணவரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய் வீட்டிற்கு சென்ற மனைவிக்கு வெட்டு
திருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சரண்யா. இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று சரண்யா தனது இருசக்கர வாகனத்தில் தாய் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த கணவர் ரமேஷ், மறைத்து வைத்திருந்த கத்தியால் சரண்யாவை வெட்டியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றிருக்கிறார் ரமேஷ்.
மருத்துவமனையில் சிகிச்சை
இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த சரண்யா வலியால் அலறி துடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சரண்யாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் அதிர்ச்சி... நிதி நிறுவன ஊழியர் கடத்தி கொலை.!! பின்னணி என்ன.?
சரணடைந்த கணவன்
இந்நிலையில் தனது மனைவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ரமேஷ், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர். மேலும் ரமேஷ் எதற்காக தனது மனைவி சரண்யாவை வெட்டினார்.? என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: அட பாவமே... மனைவி, குழந்தைகள் மீது கொலை முயற்சி.!! மது பிரியர் வெறி செயல்.!!