ரூ.9,000 வரை மாத வட்டி.. அரசின் சூப்பர் முதலீட்டு திட்டம்.. முழு விபரம்.!



Earn Up to ₹9,000 Per Month on Post Office Monthly Income Scheme Through Government Investment

பாதுகாப்பான முதலீட்டில் மாதாந்திர வருமானம் தேடுபவர்களுக்கு சரியான தேர்வாக MIS திட்டம் உதவும்.

குறைந்த அபாயத்துடன் வருமானம்:

Best Monthly Income Scheme: பாதுகாப்பான மற்றும் நிலையான நிதி எதிர்காலத்தை உருவாக்க சேமிப்பும் முதலீடும் அவசியமானவை ஆகும். முதலீட்டில் உள்ள அபாயங்களை கருத்தில் கொண்டு பலர் சரியான திட்டங்களை தேர்வு செய்ய தயங்குகின்றனர். இந்த நிலையில், அரசு ஆதரவுடன் செயல்படும் அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம் (Monthly Income Scheme - MIS) பாதுகாப்பான முதலீட்டுடன் நிலையான மாத வருமானத்தை வழங்கும் ஒரு சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், குறைந்த அபாயத்துடன் வட்டி வருமானத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏற்றதாக உள்ளது.

பாதுகாப்பான் முதலீடு:

அஞ்சலக MIS திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி தொகை, ஆண்டுக்கு ஒருமுறை சேர்க்கப்படாமல், 12 மாதங்களாக பிரித்து மாதந்தோறும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலம், முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்தை பெற முடியும். ஓய்வு பெற்றோர், வீட்டிலிருந்து நிரந்தர வருமானம் எதிர்பார்ப்பவர்கள் மற்றும் பாதுகாப்பான முதலீடு விரும்புபவர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கிறது.

Post Office Scheme

தனிநபர்களுக்கு பாதுகாப்பானது:

இந்த திட்டத்தில் தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். அதே நேரத்தில், கூட்டு கணக்கு (Joint Account) திறந்தால், அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. நீங்கள் முதலீடு செய்யும் தொகையின் அடிப்படையில், அதற்கேற்ற மாதாந்திர வட்டி தொகை நிர்ணயிக்கப்படும். முதலீட்டுத் தொகைக்கு அரசு உத்தரவாதம் இருப்பதால், முதன்முதலாக முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கும் இது பாதுகாப்பான தேர்வாக அமைகிறது. 

சிறந்த வாய்ப்பு:

தனிநபர் கணக்கில் ரூ.9 லட்சம் முதலீடு செய்தால், மாதந்தோறும் சுமார் ரூ.5,500 வட்டி வருமானமாக கிடைக்கும். அதேபோல், கூட்டு கணக்கில் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், மாதந்தோறும் சுமார் ரூ.9,250 வரை வருமானம் பெற முடியும். இதனால், மாதந்தோறும் வட்டி வருமானம் மட்டும் தேடுபவர்களுக்கு அஞ்சலக MIS திட்டம் அரசு முதலீட்டு வாய்ப்பாக கருதப்படுகிறது.