வீடியோ காலில் மனைவியை கொடூரமாக கொன்று மாமியார் குடும்பத்துக்கு காண்பித்த கணவர்.. சைக்கோ கணவனின் அதிர்ச்சி செயல்.! 



Karnataka Man Arrested for Allegedly Killing Wife, Video Calling Her Family During Crime

குடும்ப பிரச்சனையில் மனைவியை கொலை செய்த கணவர், அதனை மாமியார் குடும்பத்துக்கு வீடியோ காலில் காண்பித்து இருக்கிறார். 

தம்பதி: 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் பகுதியில் வசித்து வருபவர் பிரவீன். இவரின் மனைவி பாக்யா ஸ்ரீ. தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், அவ்வப்போது குடும்ப பிரச்சனை நடந்து வந்துள்ளது. மேலும், சந்தேகமும் இருந்து வந்துள்ளது. 

இதையும் படிங்க: மனைவியின் தலையை துண்டித்து நடுவாசலில் வைத்த கணவன்.. நள்ளிரவில் நடந்த திடுக் சம்பவம்.!

பிரிந்து சென்றார்: 

இதனால் எப்போதும் இருவரும் சண்டையிட்டு தகராறு செய்து வந்த நிலையில், ஒருகட்டத்தில் பாக்கிய ஸ்ரீ பெற்றோரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். கடந்த 2 மாதங்களாக கணவரை பிரிந்த பெண்மணி, பெற்றோரின் வீட்டில் தங்கி இருந்துள்ளார். 

மீண்டும் வந்தார்: 

பின் கடந்த ஞாயிற்றுக்கிழமையின்போது சமாதானம் அடைந்த மனைவியை பிரவீன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு இருவருக்கும் இடையே சண்டை வழக்கம்போல தொடர்ந்த நிலையில், சம்பவத்தன்று ஆத்திரத்தில் மரக்கட்டையால் மனைவியை தாக்கி இருக்கிறார்.

Crime news

வீடியோ கால்: 

இதனால் மயங்கிய மனைவியை மின்விசிறியில் தூக்கிலிட்டு கொலை செய்துள்ளார். கழுத்து இறுகி உயிருக்கு துடித்த இறுதி தருணத்தை பிரவீன் தனது நண்பர்கள் மற்றும் பாக்யாவின் குடும்பத்தினருக்கு வீடியோ காலில் காண்பித்து இருக்கிறார்.  

கைது: 

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பிரவீனை உடனடியாக கைது செய்தனர். மேலும், பாக்கியா ஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

இதையும் படிங்க: அந்தரங்க விஷயத்தில் ஏற்பட்ட சண்டை.. மனைவி கேட்ட கேள்வி.. திருமணமான 5 மாதத்தில் புதுமணப்பெண் கொலை.!