அதிகாலை 3 மணியளவில் லாரி மீது கார் மோதி கோர விபத்து! அமைச்சரின் மகள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்.! பகீர் வீடியோ...!!!
ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் தீபிகா பாண்டே சிங்கின் மகள் உட்பட 4 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். ஜாம்ஷெட்பூரின் சோனாரி பகுதியில் உள்ள மரைன் டிரைவ் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை இந்த விபத்து நடந்தது. கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதில் நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை 3 மணியளவில் நடந்த விபத்து
தொமுஹானி பகுதிக்கு அருகே அதிகாலை 3 மணியளவில் கார் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரியுடன் மோதியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதல் மிகவும் வேகமாக நடந்ததால் கார் பலத்த சேதமடைந்தது. அதில் இருந்த நால்வரும் வெளியே வர முடியாத நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: என்னா ஒரு ஸ்பீடு... காரும் - மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதால் கோர விபத்து! 4 பேர் துடிதுடித்து பலியான சோகம்... பகீர் வீடியோ...!!!
சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன. ஜாம்ஷெட்பூர் சாலை விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து குறித்து தொடரும் விசாரணை
அதிவேகம் காரணமாக இரு வாகனங்களும் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியிருக்கலாம் என முதற்கட்டமாக சந்தேகிக்கப்படுகிறது. எனினும், விபத்துக்கான முழுமையான காரணம் விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். அமைச்சர் தீபிகா பாண்டே சிங்கின் மகள் உயிரிழந்த தகவல் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Four people, including the daughter of Jharkhand Rural Development Minister Deepika Pandey Singh, were killed after the car they were travelling in collided with a truck on Marine Drive in Jamshedpur’s Sonari area early Thursday. The accident took place around 3 am near Domuhani, police said.
#Jamshedpur #Jharkhand #RoadAccident #MarineDrive #Sonari
— IndiaToday (@IndiaToday) September 24, 2026