பெத்த அம்மான்னு கூட பாக்கல...! நீயெல்லாம் ஒரு புள்ளையா? பெற்ற தாயின் தொண்டையை அறுத்துக் கொன்ற கல்லூரி மாணவன்..! நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்..!!!
காசிபேட்டை பாலாஜிநகரில் தாயுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர், கத்தியால் தாக்கி அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. குடும்பத்தில் நீண்ட நாட்களாக ஏற்பட்ட பிரச்சனைகளே இதற்கு பின்னணியாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தாயுடன் ஏற்பட்ட தகராறு
பாலாஜிநகரில் வசித்து வந்தவர் உதயஸ்ரீ. இவரது மகன் துரைபாபு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். துரைபாபுவின் தொடர் தவறான நடத்தைகள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் காரணமாக வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கத்தியால் தாக்கி கொலை
இந்த நிலையில், தாயாருக்கும் துரைபாபுவுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த துரைபாபு, கத்தியால் தனது தாயின் தொண்டையை அறுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த உதயஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
துரைபாபு கைது; போலீசார் விசாரணை
தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, தாய் கொலை தொடர்பாக துரைபாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தகராறு மற்றும் கொலைக்கான முழுமையான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பாலாஜிநகர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
హనుమకొండ జిల్లా కాజీపేట బాలాజీనగర్లో దారుణం
— TV9 Telugu (@TV9Telugu) September 24, 2026
కన్నతల్లిని హతమార్చిన కుమారుడు
చెడు తిరుగుళ్లకు అలవాటు పడిందని తల్లి ఉదయశ్రీని కత్తితో గొంతు కోసి హత్య
ప్రస్తుతం డిగ్రీ చదువుతున్న నిందితుడు దొరబాబు
కేసు నమోదు చేసి దర్యాప్తు చేస్తున్న పోలీసులు #Motherkilled #Kazipet #TV9Telugu pic.twitter.com/zB2grshhkY