விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நர்சிங் மாணவி..! பக்கத்து வீட்டு பாத்ரூமில் ரத்த வெள்ளத்தில்... பார்த்து கதறி துடித்த தாய்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்...!!!



telangana-nursing-student-mysterious-death

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில் 18 வயது நர்சிங் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த மாணவி, பக்கத்து வீட்டுக்குச் சென்ற பிறகு நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. இதையடுத்து நடத்தப்பட்ட தேடுதலில், வீட்டின் பின்புறம் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த மாணவி

ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). இவர் கம்மம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாண்டு நர்சிங் படித்து வந்தார். கல்லூரி விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்திருந்த ஹரிணி, சம்பவத்தன்று அருகில் உள்ள பக்கத்து வீட்டுக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அக்காவை ஆசையாக அழைக்க சென்ற சிறுவனை.... அடுத்த நொடி எமன் கூட்டிட்டு போயிட்டு! கண்கலங்க வைக்கும் காட்சி...!!!

பாத்ரூம் பின்புறம் சடலமாக மீட்பு

நீண்ட நேரமாகியும் மகள் வீட்டுக்குத் திரும்பாததால் அவரது தாய் ராஜேஸ்வரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. கணவர் இறந்த நிலையில், கூலி வேலை செய்து இரு மகள்களையும் ராஜேஸ்வரி வளர்த்து வருகிறார். மகளைக் காணாமல் தவித்த அவர், கிராம மக்களுடன் சேர்ந்து பல இடங்களில் தேடியுள்ளார்.

அப்போது பக்கத்து வீட்டின் பாத்ரூம் பின்புறத்தில் ஹரிணி கொடூரமான காயங்களுடன் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தாய் மற்றும் கிராம மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பக்கத்து வீட்டுக்காரர் மீது தாய் குற்றச்சாட்டு

தனது மகளை பக்கத்து வீட்டுக்காரரே கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என ராஜேஸ்வரி கண்ணீருடன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நர்சிங் மாணவி மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அவர் உயிரிழந்ததற்கான காரணம், சம்பவம் நடந்த விதம் உள்ளிட்ட கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். குற்றச்சாட்டுக்கு உள்ளான பக்கத்து வீட்டுக்காரரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: காட்டுக்குள் கண்டப்படி கிடந்த கணவன், மனைவியின் சடலம் .! விசித்திரக் கோலத்தில் கணவன்... மனைவியின் அரைநகன் உடல்..! பின்னணி என்ன? பகீர் சம்பவம்...!!!