காட்டுக்குள் கண்டப்படி கிடந்த கணவன், மனைவியின் சடலம் .! விசித்திரக் கோலத்தில் கணவன்... மனைவியின் அரைநகன் உடல்..! பின்னணி என்ன? பகீர் சம்பவம்...!!!



uttar-pradesh-bijnor-husband-wife-dead-bodies

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் கணவன், மனைவி இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். கங்கை நதிக்கரையோர காட்டுப்பகுதியில் சுஷ்மாவின் உடலும், அருகிலுள்ள மரத்தில் தேஷ்ராஜின் உடலும் கண்டெடுக்கப்பட்டன. இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்ற சில மணி நேரங்களிலேயே இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

காட்டுப்பகுதியில் கிடந்த மனைவியின் உடல்

தேஷ்ராஜ் மற்றும் சுஷ்மா ஆகியோர் நேற்று காலை கால்நடைகளுக்குத் தீவனம் சேகரிப்பதற்காக வயல்வெளிக்குச் சென்றுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவர்களைத் தேடி சென்றபோது, கங்கை நதிக்கரையோர புதரில் சுஷ்மாவின் அரைநக்ன உடல் கிடந்ததாக கூறப்படுகிறது. அவரது கழுத்தில் துப்பட்டாவால் செய்யப்பட்ட கயிறு இருந்தது.

இதையும் படிங்க: செல்போனில் பேசிய 2 வது மனைவி! காதல் மனைவியின் நடத்தையை பார்த்து கணவன் செய்த கொடூர காரியம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!!

மனைவியின் சல்வார் அணிந்த நிலையில் கணவர்

அருகிலேயே தேஷ்ராஜின் உடலும் மரத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. அவர் தனது மனைவியின் சல்வார் உடையை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது கழுத்தில் பைக்கின் கிளட்ச் வயர் பயன்படுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட விதம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

கொலையா? போலீசார் விசாரணை

இருவரும் தற்கொலை செய்துகொண்டதாக கருத முடியாத அளவுக்கு உடல்கள் இருந்த சூழ்நிலை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மர்ம மரணம் தொடர்பாக தேஷ்ராஜ் மற்றும் சுஷ்மாவின் உறவினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி, இருவரையும் மர்ம நபர்கள் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்வு முடிவுகள் மற்றும் விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. பிஜ்னோர் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: போலீஸ்கு போன் போட்டு மதுபோதையில் கணவன் இறந்ததாக கூறிய மனைவி! விசாரணயில் வெளிவந்த அதிர்ச்சி பின்னணி..!!!