செல்போனில் பேசிய 2 வது மனைவி! காதல் மனைவியின் நடத்தையை பார்த்து கணவன் செய்த கொடூர காரியம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!!



kanpur-dehat-husband-kills-second-wife-over-suspicion

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் மனைவியை சந்தேகித்த கணவன், அவரை இரும்புத் தடியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துரௌலி கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கொடூரம் நடந்துள்ளது. கொலை செய்ததாக கூறி கணவனே போலீசாரை தொடர்புகொண்டு சரணடைந்துள்ளார்.

செல்போனில் பேசியதால் சந்தேகம்

துரௌலி கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திர சங்க்வார் (30) என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இதற்கிடையே அஸ்மா என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து நீதிமன்றத்தில் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு அஸ்மா தனது பெயரை சப்னா என மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நீ தான் டி எனக்கு வேணும்! என்னையும் உனக்கு பிடிக்கும்... திக்குமுக்காடிய குடும்பத்தகராறு! நடுங்க வைத்த பகீர் பின்னணி மோதல்!!!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை சப்னா செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய நடத்தையில் கஜேந்திரனுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, தன்னை சந்தேகிப்பதாக சப்னா கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

இரும்புத் தடியால் தாக்கிய கணவன்

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கஜேந்திரன், வீட்டில் இருந்த இரும்புத் தடியை எடுத்துள்ளார். பின்னர் சப்னாவின் தலையில் சரமாரியாக தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

அதன்பின் கஜேந்திரனே போலீசாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தனது மனைவியை கொலை செய்துவிட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. தகவல் கிடைத்ததும் துரௌலி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சப்னாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கணவன் கைது

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கஜேந்திரனை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவியை கொலை செய்ய தூண்டிய காரணம், இருவருக்கும் இடையேயான குடும்பப் பிரச்சினைகள் உள்ளிட்ட கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: இப்போ சமைக்க டைம் இல்ல... டான்ஸ் கிளாஸ் போகணும்! மனைவி சொன்ன அந்த வார்த்தை.... குழந்தைகள் கண் எதிரே கணவன் செய்த வெறிச்செயல்! நாக்பூரில் நடந்த கொடூரம்....!!!