மகனுக்காக தந்தை எடுத்த முக்கிய முடிவு.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அடக்கடவுளே... அதிகாலையில் நடந்த அதிர்ச்சி! 12 வயது சிறுமியின் கண்முன்னே மடிந்த மொத்த குடும்பமும்...! ஒரு உயிர் மட்டும் தப்பியது... பண்டிகை முடிந்து தாய் வீட்டிற்கு திரும்பும் போது நேர்ந்த கொடூரம்...!!!
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அதிகாலை நேரத்தில் நடந்த சாலை விபத்து ஒரே குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மத்தூர் தாலுகா கொப்பா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், மோட்டார் சைக்கிள் மீது பால் டேங்கர் லாரி மோதியது. இதில் தந்தை, தாய் மற்றும் 9 வயது சிறுமி உயிரிழந்தனர். மற்றொரு மகள் காயங்களுடன் உயிர் தப்பினார்.
பைக்கில் ஊர் திரும்பிய குடும்பம்
பெங்களூரு தெற்கு மாவட்டம் கனகபுராவைச் சேர்ந்த முத்து, அவரது மனைவி காவ்யா மற்றும் மகள்கள் கீர்த்தனா (9), 12 வயது மூத்த மகள் ஆகியோர் கௌரி-கணபதி பண்டிகையை முடித்துவிட்டு தாய் வீட்டிலிருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்குப் புறப்பட்டனர்.
இதையும் படிங்க: ஆபாச படங்களுக்கு அடிமையான சிறுவன்.. ஆசிரியையின் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்திய அதிர்ச்சி சம்பவம்!
இன்று அதிகாலை 5.30 மணி முதல் 6 மணிக்குள் கொப்பா காவல் எல்லையில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த பால் டேங்கர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. மோதல் வேகமாக இருந்ததால், பைக்கில் சென்றவர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.
தந்தை, மகள் சம்பவ இடத்திலேயே பலி
விபத்தில் முத்து மற்றும் 9 வயது கீர்த்தனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த காவ்யாவை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
12 வயது மூத்த மகள் மட்டும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை அடுத்தடுத்து இழந்து அவர் தனியாக நிற்கும் நிலை அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொப்பா போலீசார் விசாரணை
தகவல் அறிந்த கொப்பா போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். விபத்துக்கான காரணம், டேங்கர் லாரியின் வேகம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.