அக்காவை ஆசையாக அழைக்க சென்ற சிறுவனை.... அடுத்த நொடி எமன் கூட்டிட்டு போயிட்டு! கண்கலங்க வைக்கும் காட்சி...!!!



telangana-school-bus-crushes-boy

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் சதாசிவபேட்டை அருகே பள்ளி பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சித்தாபூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது அக்காவை அழைத்துச் செல்ல வந்த எஃப்ராயிம் என்ற சிறுவன், அதே பள்ளி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

அக்காவை பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக எஃப்ராயிம் அங்கு சென்றிருந்தான். அப்போது மாணவியை இறக்கிவிட்டு புறப்பட்ட பள்ளி பேருந்து, எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது மோதியது. இதில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பள்ளி பேருந்தின் முன் விளையாட்டாக ஓடி வந்த 4 வயது சிறுவன்! அடுத்த நொடி நடந்த அதிர்ச்சி.... மனதை ரணமாக்கும் காட்சி!!!

அக்காவை அழைத்துச் செல்ல வந்தபோது நேர்ந்த சோகம்

சித்தாபூர் பகுதியில் செயல்பட்டு வரும் ‘ஜினியஸ்’ தனியார் பள்ளியில் டைட்டஸ் என்ற மாணவி படித்து வருகிறார். வழக்கம்போல் பள்ளி முடிந்து பேருந்தில் வீடு திரும்பிய அவரை அழைத்துச் செல்ல அவரது தம்பி எஃப்ராயிம் பேருந்து நிறுத்தத்துக்கு வந்திருந்தார். அப்போது சில நொடிகளில் நடந்த விபரீதம் குடும்பத்தையே நிலைகுலையச் செய்தது.

ஓட்டுநரின் அலட்சியமா? பொதுமக்கள் குற்றச்சாட்டு

பேருந்து புறப்பட்டபோது சிறுவன் சக்கரத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயமடைந்த எஃப்ராயிம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்து கதறி அழுதனர்.

பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி பேருந்துகளின் இயக்கம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன.

 

இதையும் படிங்க: இன்ஸ்டா ரீல்ஸ் பார்க்க முடியாத விரக்தி.. போனை உடைத்து விட்டு பெண் எடுத்த விபரீத முடிவு!