இனிதான் ஆட்டமே இருக்கு... சட்டப்பேரவையில் உதயநிதிக்கு கிடைத்த புதிய பொறுப்பு! சபாநாயகர் JCD பிரபாகர் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு...!!!



tn-assembly-committee-restructuring

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பல்வேறு முக்கியக் குழுக்கள் சீரமைக்கப்பட்டு, புதிய உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் இதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிட்டுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

அதன்படி, சட்டமன்ற உரிமைக்குழுவில் மொத்தம் 14 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். திமுக சார்பில் ரகுபதி, லட்சுமணன், மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சிந்து உள்ளிட்ட உறுப்பினர்களும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: சட்டசபையில் வெடித்த சினிமா பாணி அரசியல்! உதயநிதி ஸ்டாலின் பேச்சிக்கு மரண மாஸ் பதிலடி கொடுத்த அமைச்சர் வன்னி அரசு! அனல் பறந்த விவாதம்..!!!

உரிமைக்குழுவில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 14 பேர்

சட்டப்பேரவையின் உரிமைகள் தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் சட்டமன்ற உரிமைக்குழுவில் உதயநிதி ஸ்டாலினும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

மதிப்பீட்டுக் குழு, பொதுக்கணக்குக் குழுவுக்கு புதிய தலைவர்கள்

பேரவையின் செயல்பாடுகளை ஆய்வு செய்து கண்காணிக்கும் மதிப்பீட்டுக் குழுவின் தலைவராக அருள் பிரகாசம் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், அரசு நிதி செலவினங்களை ஆய்வு செய்யும் முக்கியத்துவம் வாய்ந்த பொதுக்கணக்குக் குழுவின் தலைவராக சையத் பரூக் பாஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பேரவையின் குழுக்கள் மூலம் அரசின் பல்வேறு செயல்பாடுகள், நிதி விவரங்கள் மற்றும் சட்டமன்ற நடைமுறைகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய குழு அமைப்புகள் சட்டப்பேரவை பணிகளில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: BREAKING: சற்று முன்... சட்டப்பேரவையில் திமுக திடீர் வெளிநடப்பு...! எ.வ. வேலு அறிவிப்பால் பரபரப்பு!!!