ஒரே நாளில் அதிரடி காட்டிய அரசு! திடீரென ஐஏஎஸ் அதிகாரி குமரகுருபரனிடம் பறிக்கப்பட்ட பவர் .... பின்னணியில் நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!!!



tamil-nadu-27-ias-transfer-kumaragurubaran

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், 27 ஐஏஎஸ் அதிகாரிகளை ஒரே நாளில் பணியிடமாற்றம் செய்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிக்கல்வி, கைத்தறி, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய துறைகளில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிர்வாக மாற்றத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி குமரகுருபரனிடம் இருந்த முக்கிய பொறுப்புகள் குறைக்கப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.

முக்கிய துறைகளில் புதிய அதிகாரிகள்

பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இன்னசென்ட் திவ்யாவும், கைத்தறித்துறை செயலாளராக லில்லியும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊரக வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளராக தர்மேந்திர பிரதாப் யாதவ் பொறுப்பேற்கிறார். முன்னாள் தலைமைச் செயலாளர் முருகானந்தம் டான்சி அமைப்பின் தலைவராகவும், சந்திரமோகன் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! மாதாந்திர தொகை உயர்வு... அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு!!!

குமரகுருபரனிடம் இருந்து பறிக்கப்பட்ட முக்கிய பொறுப்பு

இந்தப் பணியிடமாற்றத்தில் முக்கியமாக பார்க்கப்படுவது குமரகுருபரனின் அதிகாரக் குறைப்பு. சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறையின் கீழ் இருந்த இந்து சமய அறநிலையத்துறை தற்போது தனி அமைச்சகமாக மாற்றப்பட்டு, அதன் செயலாளராக ராஜாராமன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் குமரகுருபரனிடம் இருந்த முக்கியமான பொறுப்பு அவரிடம் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அவரது துறைகளில் அடுத்தடுத்து எழுந்த சர்ச்சைகளும், அதனால் அரசுக்கு ஏற்பட்ட நிர்வாக நெருக்கடிகளும் இதற்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன.

கோயில் நில விவகாரம் முதல் தகவல் கசிவு வரை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் தொடர்பான பத்திரப்பதிவு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வழக்கமான சார்-பதிவாளர் விடுப்பில் இருந்த நிலையில், கொடைக்கானலில் இருந்து மாற்றப்பட்ட மாற்று சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மூலம் ஒரே நாளில் சர்ச்சைக்குரிய பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. இதன் பின்னணி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், துறை நிர்வாகத்தின் மீதும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இதற்கிடையே, சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே 206 அறிவிப்புகள் தொடர்பான தகவல் வெளியானது மற்றொரு சர்ச்சையை உருவாக்கியது. ரகசிய தகவல்கள் கசிந்தது தொடர்பாக நிர்வாக ரீதியாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இவ்வாறான தொடர் சர்ச்சைகளின் பின்னணியிலேயே குமரகுருபரன் வசம் இருந்த சில முக்கிய பொறுப்புகள் மாற்றப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது. தற்போது IAS Transfer உத்தரவில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்கள், தமிழக நிர்வாக வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

 

இதையும் படிங்க: BREAKING: கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்.... சற்றுமுன் தமிழக அரசின் ஹேப்பி நியூஷ்!!!