ராமதாஸ் போட்ட ஒரு ஃபோன் கால்....! சட்டப்பேரவையே தெறிக்கவிட்ட சௌமியா அன்புமணி.... முதல்வர் விஜய்யை சிந்திக்க வைத்த அந்த தருணம்!!!



sowmiya-anbumani-assembly-demands

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தில் பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். அரசுத் துறைகளில் ஊழலை கட்டுப்படுத்துவது முதல் ஏழைப் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் வரை பல்வேறு பிரச்சினைகளை அவர் பேசினார். மேலும், ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரம் மற்றும் குடிநீர் பிரச்சினைகளுக்கும் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

ஊழலை தடுக்க கூடுதல் அதிகாரிகள் தேவை

சட்டப்பேரவை நடவடிக்கைகள் நேரலையில் ஒளிபரப்பப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய சௌமியா அன்புமணி, மானியக் கோரிக்கை விவாதத்தை இன்னும் சில நாட்கள் நடத்தியிருக்கலாம் என தெரிவித்தார். அரசுத் துறைகளில் ஊழலை முற்றிலும் ஒழிக்க கூடுதல் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும் என்றும், சேவை பெறும் உரிமைச் சட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: அவுங்களுக்கு மட்டும் தானா... எங்களுக்கும் கொடுத்தா நல்லா இருக்கும்! பாமக எம்எல்ஏ கணேஷ் பேச்சால் சிரிப்பில் மூழ்கிய சட்டப்பேரவை...! CM ரியாக்ஷன் தான் ஹைலைட்.. வைரல் வீடியோ!!!

மின்சாரம், பள்ளிக்கல்வி உள்ளிட்ட அடிப்படைத் துறைகளில் ஊழல் குறைந்தால்தான் அதன் பலன் மக்களுக்கு நேரடியாகச் சென்றடையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஊழல் கட்டுப்படுத்தப்பட்டால் மின் கட்டணம், கல்விச் செலவு உள்ளிட்டவற்றில் பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

எம்.எல்.ஏ. தொகுதி நிதியை ரூ.5 கோடியாக உயர்த்த கோரிக்கை

சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.5 கோடியாக உயர்த்த வேண்டும் எனவும் சௌமியா அன்புமணி வலியுறுத்தினார். தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் மாவட்டங்களில் குடிநீரில் ஃபுளோரைடு அதிகமாக இருப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சட்டமன்ற உறுப்பினர் நிதியை பயன்படுத்தி RO சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரம் முதல் பெண்களின் பேருந்து பயணம் வரை

தமிழகத்தில் உள்ள 105 அகதிகள் முகாம்களில் சுமார் 57,000 ஈழத் தமிழர்கள் வசித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களுக்காக அரசு அறிவித்துள்ள வீடு கட்டும் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து சட்டப்பேரவையில் பேசுமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தொலைபேசியில் கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, கிராமப்புறங்களில் இயங்கும் தனியார் பேருந்துகளுக்கும் மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை நீட்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். பல கிராமங்களில் தனியார் பேருந்துகளே முக்கிய போக்குவரத்து வசதியாக இருப்பதால், இந்த நடவடிக்கை ஏழைப் பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார். அதே நேரத்தில், பொதுப் போக்குவரத்துத் துறை முழுமையாக அரசின் கட்டுப்பாட்டிலேயே இயங்க வேண்டும் என்றும் தனது உரையில் வலியுறுத்தினார்.

 

இதையும் படிங்க: BREAKING: சற்று முன்..... தவெக அரசுக்கு இவ்வளவு அவசரம் ஏன்? எங்களுது ஆதரவு கிடையாது.....! சட்டசபையில் CM விஜய்க்கு அதிர்ச்சி..!!!