யாருகிட்ட உங்க ஆட்டம்லாம்... 3 தவறுகளுக்கு 3 நிலை தண்டனை! முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பால் ஆடிப்போன அதிகாரிகள்..!!!



tasmac-overpricing-action-suspension-fine-rules

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வசூலிப்பதை முற்றிலும் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் புதிய ஒழுங்குமுறைகளை அறிவித்துள்ளது. விதிமீறி மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது தற்காலிக பணிநீக்கம் முதல் நிரந்தர பணிநீக்கம் வரை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் எச்சரித்துள்ளார்.

மூன்று தவறுகளுக்கு மூன்று நிலை நடவடிக்கை

புதிய உத்தரவின்படி, முதல் முறையாக விதிமீறலில் ஈடுபடும் விற்பனையாளருக்கு ஒரு மாத தற்காலிக பணிநீக்கம் விதிக்கப்படும். இரண்டாவது முறையாக தவறு செய்தால் மூன்று மாதங்கள் பணிநீக்கம் செய்யப்படுவார். தொடர்ந்து மூன்றாவது முறையும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவதோடு துறைரீதியான குற்றக் குறிப்பாணையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: BREAKING : டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் விலையில்.... முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு...!!!

மேலும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.10 அல்லது அதற்கு மேல் கூடுதலாக வசூலித்தது உறுதியானால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். இதில் 60 சதவீதத்தை விற்பனையாளரும், 40 சதவீதத்தை கடை கண்காணிப்பாளரும் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடரும் புகார்கள்... அரசின் கண்காணிப்பு தீவிரம்

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் இருந்த 717 மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்ற விதியை கடுமையாக அமல்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியார்மயமாக்கல் தகவலால் புதிய சர்ச்சை

அரசின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், பல இடங்களில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதற்கிடையில், டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அத்தகைய முடிவு எடுக்கப்பட்டால் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று விற்பனையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இதையும் படிங்க: இனி தான் CM ஆட்டமே இருக்கு.... டாஸ்மாக் விஷயத்தில் முதல்வர் விஜய் கையில் எடுத்த மாஸ்டர் பிளான்.! தமிழ்நாட்டிற்கு வரப்போகும் அந்த 3 பெரிய மாற்றங்கள்.!!!