மகன் சொன்ன ஒரே வார்த்தை... அடுத்த நொடி ஆத்திரம் தாங்காமல் தாய் செய்த கொடூரம்! விடிய விடிய உடல் அருகே அமர்ந்து போட்ட நாடகம்... பகீர் சம்பவம்!!!
மகாராஜ்பூர் பகுதியில் 14 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாயும் மற்றொரு நபரும் நெருக்கமாக இருந்ததை சிறுவன் பார்த்ததாக கூறப்படுகிறது. இதை தந்தையிடம் தெரிவிக்கப் போவதாக அவன் கூறிய நிலையில், கழுத்தை நெரித்து கொலை செய்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.
தாயின் ரகசியத்தை தந்தையிடம் கூறுவதாக கூறிய சிறுவன்
மகாராஜ்பூர் பகுதியில் வசித்து வந்த 14 வயது சிறுவன், தனது தாய் மற்றொரு நபருடன் முறையற்ற உறவில் இருப்பதை நேரில் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவன், நடந்ததை தனது தந்தையிடம் தொலைபேசி மூலம் தெரிவிக்கப் போவதாக கூறியுள்ளான்.
இதையடுத்து, ரகசியம் வெளியில் தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் சிறுவனை தடுக்க தாயும் அவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நபரும் முயன்றுள்ளனர். தொடர்ந்து இருவரும் சேர்ந்து சிறுவனின் கழுத்தை நெரித்ததாகவும், இதில் அவன் உயிரிழந்ததாகவும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 14 வயது சிறுவன் உயிரிழந்த விதம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
வயிற்று வலியால் இறந்ததாக நாடகம்
சிறுவன் உயிரிழந்த பிறகு, திடீரென ஏற்பட்ட வயிற்று வலியால் அவன் இறந்துவிட்டதாக தாய் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விடிய விடிய சிறுவனின் உடல் அருகிலேயே அவர் அமர்ந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், சிறுவனின் கழுத்தில் இருந்த காயங்களை கவனித்துள்ளனர். இதனால் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.