உதயமானது தமிழகத்தின் புதிய இரண்டு மாவட்டங்கள்!

உதயமானது தமிழகத்தின் புதிய இரண்டு மாவட்டங்கள்!


new two disctrict in tamilnadu

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை நேற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

நேற்று காலை திருப்பத்தூர் மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், உள்ளாட்சித் தேர்தலுக்கும், மாவட்டங்கள் பிரிப்புக்கும் தொடர்பில்லை என்று கூறினார். 

new discrict

அவரைத்தொடர்ந்து பேசிய தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டின் தலைசி‌றந்த மாவட்டமாக திருப்பத்தூர் உருவெடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். தமிழ்நாட்டின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டத்தையும், 36-வது மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தையும் தொடங்கி வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தின் தொடக்க விழாவில் ரூ.94 கோடியே 37 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளும், ராணிப்பேட்டை மாவட்ட தொடக்க விழாவில் ரூ.89 கோடியே 73 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.184 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.