திருமணமான 3வது நாள் விருந்துக்கு வந்த புதுப்பெண் செய்த காரியம்! அறைக்குள் சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!



new-married-bride-commits-suicide-8GP68A

வேலூர் மாவட்டம் சக்கரமல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் சீனிவாசன். இவரது மகள் திவ்யா. 21 வயது நிறைந்த இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு சென்னை திருநின்றவூரை சேர்ந்த ராகவேந்திரன் என்பவருடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் திருமணமாகி மூன்று நாட்கள் ஆகும் நிலையில், நேற்று திவ்யா தனது கணவர் ராகவேந்திரனுடன் சக்கரமல்லூர் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு விருந்திற்கு வந்துள்ளார். அங்கு நன்கு சாப்பிட்ட அவர் அனைவரிடமும் மிகவும் கலகலப்பாக பேசி சிரித்துள்ளார். சிறிது நேரம் கழித்து சற்று ஓய்வு எடுப்பதாக கூறி விட்டு தனது அறைக்கு சென்றுள்ளார்.

marriage

உள்ளே சென்ற திவ்யா வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அறைக்கதவை தட்டியுள்ளனர். ஆனால் வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் பதறிப்போன அவர்கள் உடனே கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு திவ்யா தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

இதனை கண்டதும் அதிர்ச்சியில் அவரது பெற்றோர்கள் கதறி அழுதுள்ளனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமான மூன்று நாட்களிலேயே திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.