கொரோனா தடுப்பு: மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பாராட்டித்தள்ளும் திமுக தொண்டர்கள்! - TamilSpark
TamilSpark Logo
அரசியல் தமிழகம்

கொரோனா தடுப்பு: மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பாராட்டித்தள்ளும் திமுக தொண்டர்கள்!

சீனாவில் ஆரம்பித்த கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி, உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்நோய் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில், திமுகவின் எம்பி - எம்எல்ஏக்கள் அனைவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் தமிழக அரசு கொரோனாவை தடுப்பதற்காக, கூடுதல் நிதி ஒதுக்குவதுடன், தமிழகத் தொழிலதிபர்களும் உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கி உள்ளது. குறிப்பாக தினக்கூலி தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தான் முறைசாரா தொழிலாளர்களுக்கு திமுக நிதியுதவி அறிவித்துள்ளது.


 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo