தமிழகம்

ஏற்கனவே 2 பொண்டாட்டி.. ஆனாலும் தீராத ஆசை.. சிறுமியுடன் குடித்தனம் நடத்திய இளைஞர்.. அதிர்ச்சியில் 2 மனைவிகள்!

Summary:

பள்ளி மாணவியுடன் குடும்பம் நடத்திவந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பள்ளி மாணவியுடன் குடும்பம் நடத்திவந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன். இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு மனைவிகள் உள்ளனர். இரண்டு மனைவிகளுடனும் குடும்பம் நடத்திவந்த ஸ்டீபனுக்கு அதே பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி ஒருவருடம் பழக்கம் ஏற்படத்துள்ளது.

பழக்கம் நாளடைவில் காதலாக மாறியநிலையில், சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி, பள்ளி மாணவியுடன் நெருங்கி பழகிவந்துள்ளார் ஸ்டீபன். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் பதற்றமடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அந்த பகுதி காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமிக்கும், ஸ்டீபனுக்கும் இடையே இருந்த பழக்கம் குறித்து தெரியவந்தது. மேலும் சிறுமியின் பெற்றோர் ஸ்டீபனுடானா பழக்கம் குறித்து அவரை கண்டித்ததும் தெரியவந்தது. இதன் அடிப்படையில் மாணவி ஸ்டீபனுடன் ஓடிச்சென்றதை போலீசார் உறுதி செய்தனர்.

இதனை தொடர்ந்து இருவரையும் தேட ஆரம்பித்த போலீசார், நாகர்கோவில் மலை அடிவாரத்தில் ஸ்டீபன் பள்ளி மாணவியுடன் குடும்பம் நடத்திவருவதை கண்டு பிடித்தனர். இதையடுத்து ஸ்டீபன் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ஏற்கனவே இரண்டு மனைவிகள் இருந்தும், பள்ளி மாணவியுடன் இளைஞர் வீட்டை விடு ஓடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement