பார்க்கும்போதே கண்கலங்குது!! வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட ஆட்டோ ஓட்டுநர்.. அவர் பேசிய கடைசி வார்த்தைகள்..



Man commit suicide near Kadalor and video goes viral

குடும்ப தகராறு காரணமாக ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டநிலையில், இறப்பதற்கு முன் அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்துவந்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தில் இருந்து பிரிந்து தனி குடித்தனம் செல்ல வேண்டும் என இவரது மனைவி பிரியா தமிழ் செல்வனிடம் தகராறு செய்துவந்ததாக கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் கணவன் மனைவி இடையே தகராறு முற்றியநிலையில், மனமுடைந்த தமிழ் செல்வன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்கு மாட்டியநிலையில், "என் பிள்ளைங்கள பாத்துக்கங்க. நான் திரும்பி வருவேன். பிறந்து வருவேன், 2 அக்காவும், தம்பிகங்களும் அம்மாவை பாத்துக்கங்க" என வீடியோ வெளியிட்டு தமிழ் செல்வன் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.