ஒரே வீட்டில், தனித்தனி அறையில் காதல் ஜோடி செய்த காரியம்! ஒரே மாதத்தில் நேர்ந்த பரிதாபம்!



lovers-commits-suicide-for-family-torture

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே மோத்தக்கல் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ஜெயக்குமார். 24 வயது நிறைந்த இவர் டிப்ளமோ படித்துள்ளார்.  இந்நிலையில் இவர் அடிக்கடி கல்லூர் கிராமத்திற்கு சென்று வந்தபோது அங்கு விஜயா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அதுவே நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

ஆனால் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஜெயக்குமார், விஜயா இருவரும் பெற்றோருக்கு தெரியாமல், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

lover

அதனை தொடர்ந்து அவர்கள்  கோட்டக்கல் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் விஜயா வீட்டிலிருந்து தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பி வந்துள்ளது. மேலும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

 இதனால் நிம்மதியின்றி வாழ்ந்த இருவரும் மனமுடைந்து  தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து அவர்கள் வீட்டில்தனித்தனி அறையில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.