மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
ஹெட்செட்டுக்காக உயிரைவிட்ட 19 வயது கல்லூரி மாணவர்.. இரயில் மோதி நடந்த சோகம்.!

சென்னையில் உள்ள கோடம்பாக்கம் இரயில் நிலையத்தில், இன்று கல்லூரி மாணவர் ஒருவர் இரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
புறநகர் மின்சார இரயிலில் பயணம் செய்த மாணவர், தனது ஹெட்செட்டை தவறுதலாக தண்டவாளத்தில் விட்டுள்ளார்.
இதனால் தண்டவாளத்தில் இறங்கி ஹெட்செட்டை எடுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இரயில் மோதி மரணம்
மாயமான ஹெட்செட்டை அவர் தேடிக்கொண்டு இருந்தபோது, அவ்வழியாக வந்த புறநகர் இரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த மாம்பலம் இரயில்வே காவல்துறையினர், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: செங்கல்பட்டு: தண்ணீர் வாளியில் தலைகுப்பற சடலமாக கிடந்த 1 வயது குழந்தை.. கண்ணிமைக்கும் நேரத்தில் விபரீதம்.!
முதற்கட்ட விசாரணையில் கல்லூரி மாணவர் ராஜகோபால் (வயது 19), இரயில் மோதி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. புளூடூத் ஹெட்செட்டை அவர் தண்டவாளத்தில் தவறவிட்டு, பின் அதனை தேடிக்கொண்டு இருந்தபோது சோகம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: பயணிகள் இரயில் மோதி தலை துண்டாகி மரணம்; பொங்கலுக்கு அக்கா வீட்டிற்கு வந்து பலியான பரிதாபம்.!