செங்கல்பட்டு: தண்ணீர் வாளியில் தலைகுப்பற சடலமாக கிடந்த 1 வயது குழந்தை.. கண்ணிமைக்கும் நேரத்தில் விபரீதம்.!



in Chengalpattu 1 Year Old Baby Dies

தாய் உணவு எடுத்து வரும் 1 நிமிடத்திற்குள் சிறுவனின் உயிர் பிரிந்தது.

செங்கல்பட்டு மாவட்டம், வில்லியம்பாக்கம், மேலச்சேரியில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 28). இவரின் மனைவி ஜாய்ஸ். தம்பதிகளுக்கு ஆல்வின் ஜோ என்ற 4 வயது மகன்,  அகஸ்டின் என்ற 1 வயது மகன் இருக்கின்றனர். 

இதனிடையே, நேற்று குழந்தை அகஸ்டினுக்கு ஜாய்ஸ் உணவு ஊட்டிவிட்டார். பின் குழந்தையை வீட்டின் வெளியே அப்படியே இருக்கவிட்டு, குழந்தைக்கு உணவு எடுக்க வீட்டிற்குள் சென்றுள்ளார். பின் மீண்டும் வந்தபோது மகன் காணவில்லை. 

இதையும் படிங்க: தலைக்கவசம் அணிந்தும் தலைநசுங்கி பறிபோன உயிர்; பேருந்து மோதி சோகம்.!

Chengalpattu

அங்கிருந்த தெரு குழாயில் தண்ணீர் நிரம்பிய வாளியில் குழந்தையின் உடல் தலைகுப்புற கிடந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி மகனை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு குழந்தையின் மரணம் உறுதி செய்யப்பட்டது.  

இந்த விஷயம் தொடர்பாக பாலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 
 

 

 

இதையும் படிங்க: என் புள்ள போயிருச்சே - மூச்சுத்திணறி உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை.. மருத்துவமனையில் சோகம்.. பெற்றோர் குமுறல்.!