மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
என் புள்ள போயிருச்சே - மூச்சுத்திணறி உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை.. மருத்துவமனையில் சோகம்.. பெற்றோர் குமுறல்.!

என் அன்பு குழந்தை பரிதாபமாக மூச்சுத்திணறி உயிரிழந்துவிட்டதே என பெற்றோர் மகளின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர், வேப்பங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மனைவி பிரீத்தி. தம்பதிகளுக்கு ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது.
இதனிடையே, நேற்று இரவில் சிறுமிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் மகளை உடனடியாக அருகில் இருக்கும் வெற்றிவேல் மருத்துவமனைக்கு அழைத்து வந்த பெற்றோர், சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.
இதையும் படிங்க: மதுரை - தூத்துக்குடி புதிய இரயில் பாதை வேண்டாம் என எழுதிக்கொடுத்த தமிழ்நாடு அரசு; மத்திய அமைச்சர் பதில்.!
குழந்தை மரணம்
அங்கு குழந்தைக்கு மருத்துவர் ஊசி செலுத்தியதாக கூறப்படும் நிலையில், ஊசி செலுத்தப்பட்ட சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் கண்ணீர் துயரத்திற்கு உள்ளாகினர்.
மேலும், கோபத்தில் மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்து, சில பொருட்களை உடைத்து நொறுக்கினார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சமாதானப்பேச்சுவார்தையில் ஈடுபட்டனர். மூச்சுத்திணறல் ஏற்பட்ட குழந்தை உயிரிழந்தது பெற்றோர், உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பெண்கள் அரசு விடுதிக்குள் புகுந்து ஆபாச பேச்சு, ரகளை.. 2 சிறார்கள் அடாவடி செயல்.! தூத்துக்குடியில் அதிர்ச்சி.!