பயணிகள் இரயில் மோதி தலை துண்டாகி மரணம்; பொங்கலுக்கு அக்கா வீட்டிற்கு வந்து பலியான பரிதாபம்.!



in Erode Sengottai Mysore Train Hits Man Died 

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், ஓங்காலிபுரம் பகுதியில் வசித்து வருபவர் மூர்த்தி (வயது 56). இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். பொங்கல் பண்டிகைக்காக ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் பகுதியில் இருக்கும் அக்கா லட்சுமியின் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். 

நிகழ்விடத்தில் பலி

நேற்று முன்தினத்தில் பாசூர் - ஊஞ்சலூர் இரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முற்பட்டார். அப்போது, அவ்வழியாக ஈரோடு - செங்கோட்டை பயணிகள் இரயில் வந்த நிலையில், இரயில் மோதியதில் மூர்த்தியின் தலை துண்டாகி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க: திடீரென சாலையின் குறுக்கே புகுந்த பாட்டி; அரசுப்பேருந்து மோதி பரிதாப பலி.!

erode

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த ஈரோடு இரயில்வே காவல்துறையினர், மூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: வீட்டு வேலைகளை செய்ய சொன்னதால் 10 வயது சிறுமி தற்கொலை? ஈரோட்டில் சோகம்.! பெற்றோர் கண்ணீர்.!