திடீரென சாலையின் குறுக்கே புகுந்த பாட்டி; அரசுப்பேருந்து மோதி பரிதாப பலி.!



erode-bhavani-sagar-aged-woman-died


ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர், தயிர்பள்ளம், பெயர் வீதியில் வசித்து வருபவர் சின்னப்பொண்ணு (வயது 70). மூதாட்டி மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார்.

நேற்று அங்குள்ள கொத்தமங்கலம், தயிர்பள்ளம் பாலம் பகுதியில், சாலையோரம் வலப்புறமாக நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது, திடீரென சற்றும் எதிர்பார்த்த விதமாக சாலை நடுவே வந்தார். 

erode

மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மூதாட்டிக்கு பின்புறம் சாலையில் அரசுப்பேருந்து வந்த நிலையில், மூதாட்டி திடீரென குறுக்கே புகுந்த காரணத்தால், அவர் பேருந்து மோதி படுகாயம் அடைந்தார். 

இதையும் படிங்க: வீட்டு வேலைகளை செய்ய சொன்னதால் 10 வயது சிறுமி தற்கொலை? ஈரோட்டில் சோகம்.! பெற்றோர் கண்ணீர்.!

தகவல் அறிந்த காவல்துறையினர், விரைந்து வந்து மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெருந்துறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதையும் படிங்க: 5-ம் வகுப்பு சிறுமி செய்யும் காரியமா இது.? வீடு திரும்பிய தாய் கண்ட அதிர்ச்சி காட்சி.!