மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
5-ம் வகுப்பு சிறுமி செய்யும் காரியமா இது.? வீடு திரும்பிய தாய் கண்ட அதிர்ச்சி காட்சி.!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையத்தில் மஞ்சுளா, சரவணன் என்ற தம்பதி வசித்து வருகின்றார்கள். இவர்களது 8ம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் அவர்களது தாத்தா பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வருகிறார். இரண்டாவது மகள் அக்ஷயா ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றார்.
நேற்று முன்தினம் தன் மகளிடம் தாய் மஞ்சுளா வீட்டு வேலைகளை செய்யச் சொல்லி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து மாலை அவர் வீட்டிற்கு வந்தபோது சமையல் அறையில் அக்ஷயா தூக்கில் தொங்கியபடி கிடந்தார்.
இதை பார்த்து, பதறிப்போன அவர் அக்கம் பக்கத்தினரை அழைத்து அவர்களது உதவியுடன் மருத்துவமனைக்கு அக்ஷயாவை கொண்டு சென்றார். மருத்துவர்கள் அக்ஷயாவை பரிசோதித்து விட்டு அந்தப் பெண் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். வீட்டு வேலை செய்ய சொல்லியதால் 5ம் வகுப்பு சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இரண்டாவது திருமணம், குடிப்பழக்கம், மாமியாரின் டார்ச்சர் - ராகுல் டிக்கியின் மனைவி அதிர்ச்சி பேட்டி.! வாழ்க்கை தறிகெட்டது எப்படி?
இதையும் படிங்க: ஈரோடு: அலட்சியமாக சாலையை கடந்ததால் நேர்ந்த சோகம்: டூவீலர் மோதி, கார் சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி.!