ஈரோடு: அலட்சியமாக சாலையை கடந்ததால் நேர்ந்த சோகம்: டூவீலர் மோதி, கார் சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி.!



in Erode 70 Year Old Man Dies Accident 

 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சை புளியம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம் (வயது 70). இவர் மளிகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி 14 அன்று, சத்தியமங்கலம் - கோவை நெடுஞ்சாலையில், புளியம்பட்டி கிராமம், ஆதிபராசக்தி கோவில் இணைப்பு சாலையில் மிதிவண்டியில் வந்துகொண்டு இருந்தார். 

அலட்சியமாக சாலையை கடந்தார்

அப்போது, சாலையை கடக்க முற்பட்டவர், முன்பின் பார்க்காமல் திடீரென குறுக்கே வந்து சாலையை கடந்தார். இதனால் அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் முதியவரின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்தவர், அவ்வழியாக சத்தியமங்கலம் - பழனி நோக்கி பயணம் செய்த காரின் சக்கரத்தில் சிக்கினார். 

இதையும் படிங்க: ஈரோடு: வேகத்தடையில் இளைஞருக்கு காத்திருந்த எமன்; வேலைக்கு சென்று வரும்போது சோகம்.!

erode

விபத்தில் சிக்கி மரணம்

இதில் கார் அவரின் மீது ஏறி-இறங்கிய நிலையில், படுகாயமடைந்த ஆறுமுகத்தை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இந்த சம்பவத்தில் ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விபத்தின் சிசிடிவி கேமிரா காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: தாயைப்பற்றி போதையில் ஆபாச வசைப்பாடல்.. கார் ஓட்டுனரை திரைப்பட பாணியில் கொன்ற முதலாளி.. பதறவைக்கும் சம்பவம்.!