ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
வீட்டு வேலைகளை செய்ய சொன்னதால் 10 வயது சிறுமி தற்கொலை? ஈரோட்டில் சோகம்.! பெற்றோர் கண்ணீர்.!

ஈரோடு மாவட்டம், கோபி, உடையாம்பாளையம் பகுதியில் வசிப்பவர் சரவணன். மனைவி மஞ்சுளா. தம்பதிகளின் இளயமகள் அக்சயா (வயது 10). மூத்த மகள் பாட்டி-தாத்தாவின் பராமரிப்பில் இருக்கிறார்.
சிறுமி அக்சயா அங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று காலை நேரத்தில் வீட்டில் இருந்த வேலைகளை செய்ய மஞ்சுளா மகளிடம் கூறிவிட்டு, பின் வேலைக்கு சென்றுள்ளார்.
இதையும் படிங்க: 5-ம் வகுப்பு சிறுமி செய்யும் காரியமா இது.? வீடு திரும்பிய தாய் கண்ட அதிர்ச்சி காட்சி.!
சிறுமி தற்கொலை
மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்த மஞ்சுளா, மகள் சமையல் அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கண்டுள்ளார். இதனால் அலறி இருக்கிறார்.
சத்தம் கேட்டு வந்த உறவினர்கள், சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மரணம் உறுதியானது. இந்த விஷயம் குறித்து கோபி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இரண்டாவது திருமணம், குடிப்பழக்கம், மாமியாரின் டார்ச்சர் - ராகுல் டிக்கியின் மனைவி அதிர்ச்சி பேட்டி.! வாழ்க்கை தறிகெட்டது எப்படி?