விஜய் - திரிஷா சர்ச்சை.. அந்த காரை இப்போ யாரு வச்சிருக்கா? - விமலின் நக்கல் பதில்.!
கள்ளக்காதல் ரகசியம் வெளிவந்ததால் ஆத்திரம்.. கணவரை ஸ்கெட்ச் போட்டு கொன்ற மனைவி.!
கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டி கணவரை மனைவி தீர்த்துக்கட்டிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பெரிய நெகமத்தை பகுதியில் வசித்து வருபவர் சதீஷ்குமார் (வயது 40). இவர் தேங்காய் பறிக்கும் தொழிலாளியாக இருந்து வருகிறார். சதீஷ்குமார் சரண்யா என்ற பெண்மணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதிகள் இருவருக்கும் சுதிக்ஷன் என்ற 9 வயது மகனும், யக்ஷிதாஸ்ரீ என்ற 6 வயது மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக தம்பதிகள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
மாயமான கணவன்:
சரண்யா குழந்தைகளுடன் குமாரபாளையத்தில் இருக்கும் தாய் வீட்டில் வசித்து வருகிறார். சதீஷ்குமார் அவ்வப்போது குமாரபாளையத்துக்கு சென்று தனது குழந்தைகளை பார்த்து வருவது வழக்கம் என கூறப்படுகிறது. இதனிடையே கடந்த மார்ச் 3ஆம் தேதி சதீஷ்குமார் மாயமான நிலையில், சரண்யா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையும் படிங்க: IAS அதிகாரியின் மகள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை.. 8 மாதத்தில் கசந்த காதல் திருமணம்.!
வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்ட சடலம்:
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் பகுதியில் வாய்க்காலில் சதீஷ்குமாரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சதீஷ்குமாரின் உடலை மீட்ட காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, சரண்யாவின் உறவினருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும் கடந்த 5 ஆண்டுகளாக சரண்யாவும், உறவினரான முருகனும் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததும் உறுதியானது.
உறவினருடன் கள்ளத்தொடர்பு:
இந்த தகவல் அறிந்த சதீஷ்குமார் சரண்யா மற்றும் முருகனை கண்டித்து நிலையில், இருவரும் கொலை செய்ய திட்டம் தீட்டி இருக்கின்றனர். அதன்படி சதீஷ்குமார் தனது குழந்தைகளை பார்க்க வந்த தகவலை சரண்யா ரகசியமாக தனது கள்ளக்காதலனுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
காரில் கடத்தி கொலை:
இதன் பின்னர் சதீஷ்குமார் தனது ஊருக்கு திரும்பி கொண்டிருந்தபோது கள்ளக்காதலன் முருகன் தனது நண்பர்களான கோபிநாத், சிவலிங்கம், 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேருடன் அவரை வழிமறித்து காரில் கடத்தி கொலை செய்து சடலத்தை வாய்க்காலில் வீசி இருக்கின்றனர். கொலை குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பிரிந்து சென்ற மனைவி மகிழ்ச்சியாக இருந்ததால் கொடூர கொலை.. சைக்கோ கணவன் வெறிச்செயல்..!