மு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது.! சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.! என்ன காரணம்?karthik-thondaiman-supporter-increasd

வி. ஆர். கார்த்திக் தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார். இவர் புதுக்கோட்டை தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு, 2012 சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தரப்பினரும், முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் தரப்பினரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டை அதிமுக மாவட்ட அலுவலகத்தில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கார்த்திக் தொண்டைமான் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இது அதிமுகவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Admk

புதுக்கோட்டை மாவட்டத்தில் மன்னர் குடும்பத்திற்கு என்று தனி மரியாதை உள்ளது. அதிலும் வி. ஆர். கார்த்திக் தொண்டைமான் மீது அப்பகுதி மக்கள் அதீத பாசம் வைத்துள்ளனர். அதற்கு முக்கிய காரணம், கார்த்திக் தொண்டைமான் அனைத்து தரப்பு மக்களிடமும் மிகவும் எளிமையாகவும், பாசத்துடனும் பழகக்கூடியவர். கடவுள் பக்தி அதிகம் கொண்டவர். அப்பகுதியில் நடக்கும் அனைத்து இன்ப துன்ப நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார்.

அதிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாரைவளர் வாராப்பூர் நாட்டில் பதினைந்து ஊராட்சிகள் உள்ளன. அப்பகுதியில் ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிகின்றனர். அவர்கள் அனைவரும் கார்த்திக் தொண்டைமான் அவர்களின் விசுவாசிகள் என்றே கூறலாம். இன்றளவும் தொண்டைமான் வம்சம் ஏழை மக்களுக்கு வாரிவழங்கிக்கொண்டுதான் இருக்கின்றது. இந்தநிலையில் தற்போது புதுக்கோட்டை அதிமுகவின் சக்திவாய்ந்த கோட்டையாக மாறியுள்ளது.

Admk

வரும் சட்டமன்ற தேர்தலில் கார்த்திக் தொண்டைமான் அவர்கள் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் புதுக்கோட்டையில் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் போட்டியிட்டால் கூட வெற்றிபெற முடியாது என கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். அதற்கு முக்கிய காரணம் கார்த்திக் தொண்டைமான் அவர்கள் மீது அப்பகுதி மக்கள் வைத்திருக்கும் அளவுகடந்த பாசம் என்றே கூறலாம். அதிலும் தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களும், கார்த்திக் தொண்டைமான் அவர்களும் ஒன்றாக இணைந்திருப்பது அதிமுகவினரிடையே உச்சகட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.