மனைவியின் அக்கா வன்கொடுமை.. காதல் திருமணம் கசந்து, கர்ப்பத்தால் அம்பலமான அதிர்ச்சி உண்மை.! காட்டிக்கொடுத்த DNA சோதனை.!
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் கர்ப்பத்தால் தங்கை கணவர் கைதானதன் அதிர்ச்சி பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
காதல் திருமணம்:
சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை, நேதாஜி நகர், இரண்டாவது தெரிவில் வசித்து வருபவர் கவிதா (வயது 32), பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் தனது மாமா மகன் சுரேஷ் (வயது 38) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தம்பதிகள் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!
6 மாத கர்ப்பம்:
கவிதாவின் சகோதரி மல்லிகா (வயது 35), பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். கவிதாவின் பராமரிப்பில் இருக்கிறார். இதனிடையே, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி மல்லிகா ஆறு மாத கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிர்ந்துபோன கவிதா சகோதரியிடம் விசாரித்தபோது பதில் இல்லை.

பெண் மரணம்:
இதனையடுத்து, சகோதரியின் நிலை குறித்து ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் வழக்கை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றி விசாரிக்க உத்தரவிட்டனர். மல்லிகாவுக்கு பெகுழந்தையும் பிறந்த நிலையில், டிசம்பர் 14ம் தேதி பெண்மணி மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்தார்.
டிஎன்ஏவில் அம்பலமான உண்மை:
அதிகாரிகளுக்கு எந்த விதமான துப்பும் கிடைக்காததால், சுரேஷுக்கு சந்தேகத்தின் பேரில் டி.என்.ஏ. பரிசோதனை செய்தனர். அப்போது, மல்லிகாவின் குழந்தைக்கு சுரேஷ் தந்தை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, சுரேஷை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 26 வயது மருமகளை கர்ப்பமாக்கிய 66 வயது மாமனார்.. கர்ப்பத்தால் அம்பலமான திடுக் உண்மை.. தமிழகத்தில் ஷாக்.!