என்ன ஒரு தில்லாலங்கடி வேலை... விஜய் தலைமைக்கு பறந்த சீக்ரெட் ரிப்போர்ட்! கோட்டையில் பரபரப்பு..!!!



tvk-government-bribery-allegations-department-official

தமிழக வெற்றிக் கழக தலைமையிலான அரசில், ஒரு முக்கிய அரசுத் துறையின் உயரதிகாரி மீது லஞ்ச புகார் எழுந்துள்ளதாக கூறப்படும் தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பணி மாறுதல், ஒப்பந்த அனுமதி மற்றும் கோப்பு ஒப்புதல் உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக கூறப்படுவதால், கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தி அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரின் உத்தரவு தாமதமானதாக குற்றச்சாட்டு

தகவலின்படி, கூட்டணி கட்சி நிர்வாகி ஒருவரின் பணி மாறுதல் தொடர்பான கோப்பை சம்பந்தப்பட்ட அமைச்சர் ஆய்வு செய்து உடனடியாக ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த கோப்பு உயரதிகாரியின் அலுவலகத்தை அடைந்த பிறகு அது நீண்ட நேரம் நிலுவையில் வைக்கப்பட்டதாகவும், பணம் வழங்கப்பட்ட பின்னரே அதற்கு இறுதி ஒப்புதல் கிடைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: சற்றுமுன்.... தவெக ஆட்சி கவிழ்ப்பு..... திரைக்கு பின்னால் நடக்கும் சதிவேலை! இளம்படையின் விபரீதத்தால் மூத்த நிர்வாகிகள் அதிர்ச்சியில்...!!!

கூட்டணி தரப்பில் அதிருப்தி

அமைச்சரின் உத்தரவே உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால், பொதுமக்களின் கோரிக்கைகள் எந்த நிலையை எதிர்கொள்ளும் என்ற கேள்வியை கூட்டணி கட்சித் தலைவர்கள் எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதுபோன்ற செயல்பாடுகள் அரசின் நிர்வாக நம்பகத்தன்மையை பாதிக்கக்கூடும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயர்மட்டக் குழுவிடம் புகார்

குறித்த அதிகாரி தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி, கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முதலமைச்சர் விஜய் தலைமையிலான கட்சியின் உயர்மட்டக் குழுவிடம் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் உண்மை நிலையை ஆய்வு செய்து, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: விஜய்யின் 5 தவெக அமைச்சர்களை குறிவைக்கும் திமுக... 'ஆபரேஷன் ஈகிள் ஐ' ஸ்டார்ட்...! அறிவாலயத்தால் அதிரும் கோட்டை!!!