விஜய்யின் 5 தவெக அமைச்சர்களை குறிவைக்கும் திமுக... 'ஆபரேஷன் ஈகிள் ஐ' ஸ்டார்ட்...! அறிவாலயத்தால் அதிரும் கோட்டை!!!
தமிழக அரசியல் வட்டாரத்தில் ஆபரேஷன் ஈகிள் ஐ என்ற பெயரில் புதிய அரசியல் வியூகம் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்கும் நடவடிக்கையில் திமுக ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
அமைச்சர்களின் செயல்பாடுகள் மீது தீவிர கண்காணிப்பா?
தகவல்களின்படி, அதிக முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை கவனித்து வரும் ஐந்து அமைச்சர்களின் நிர்வாக நடவடிக்கைகள், துறை சார்ந்த கோப்புகள், டெண்டர்கள், அதிகாரப்பூர்வ உத்தரவுகள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அம்சங்களை மூத்த நிர்வாகிகள் அடங்கிய குழு ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. புதிய அமைச்சர்களின் நிர்வாக முடிவுகளில் ஏற்படும் தவறுகளை அரசியல் ரீதியாக முன்வைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அடிமேல் அடிவாங்கும் அதிமுக! தவெகவில் ஜெயகுமாரா? கசிந்த தகவலால் செம ஷாக்கில் எடப்பாடி..!!!
தவெக தரப்பிலும் முன்னெச்சரிக்கை
இதற்கிடையில், எதிர்க்கட்சியின் கண்காணிப்பு குறித்த தகவல்களைத் தொடர்ந்து தவெக தலைமையும் அமைச்சர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. முக்கிய அரசாணைகள் அல்லது நிர்வாக உத்தரவுகளை வெளியிடும் முன் சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்கவும், தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்கவும், பொதுவெளியில் கருத்து தெரிவிக்கும்போது கூடுதல் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் வட்டாரத்தில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
ஊழல் குற்றச்சாட்டுகள் அல்லது நிர்வாக குறைபாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பதில் ஆளுங்கட்சி தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், 'ஆபரேஷன் ஈகிள் ஐ' தொடர்பான இந்த தகவல்கள் குறித்து திமுக அல்லது தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. இதனால், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க: யார் அந்த கருப்பு ஆடு.? உளவுத்துறையில் நடந்த 'உள்வேலை'..! கோட்டையில் நடக்கும் ட்விஸ்ட்டால் அதிர்ச்சியில் CM விஜய்!!!